கண்ணாடி அறைக்குள்ளே காற்றாட 
கணிப்பொறி முன் கண்கள் தேட 
கழுத்திலேயே சுருக்கு கயிறை
கட்டிக் கொண்டு திரியும் வாழ்க்கை.,

போக்குவரத்து நிறுத்தங்களில் 
நிராகரிக்கபட்ட நிமிடங்களை 
நிம்மதிக்காக தேடும் 
நிஜம்மில்ல வாழ்க்கை..,

மினுமினுக்கும் விளக்கு ஒளியில் 
மிடுக்கான உடையில் 
போதையில் மிதக்கும் வாழ்க்கை..,

இதுமட்டுமா வாழ்க்கை..,
இலை மீது மழைத்துளி 
அதை கொட்டி விளையாட காதலி..,

இமை இடையில் வரும் 
இன்ப கண்ணீர் துளி 
அதற்காகவே பிறந்த அம்மா ..,

பொறமை கொள்ள உறவான 
புண்ணகிக்கும் சகோதரன் 
இப்படியும் ஒரு வாழ்க்கை 
இதற்குள்ளும் வா ..,!
வாழ்ந்து பார்க்கலாம்

 
 
 

    SIVA K

    THIS WEBSITE IS DEVELOPED BY  it
    student 
    this web site is give the lot of information
    very easy to achieve 
    for you  

    Archives

    June 2012

    Categories

    All